மக்களது வரிப்பணம் நல்ல முறையில் செலவிடப்பட வேண்டுமே தவிர மோசமான முறையில் அல்ல என்று ஸ்பேஸ் எக்ஸ் (Space) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க (USA) அரசு வருவாயைப் பெரிதும் மீறி செலவழிப்பதால் பணவீக்கம் ஏற்படுகிறது.
சிறப்பு குழு
இது நிதிப்பற்றாக்குறையை நிரப்புவதற்காக அதிக பணம் அச்சிடுவதற்கும் விலைகள் உயர்வதற்கும் வழிவகுக்கின்றது. மேலும், பணவீக்கத்திற்கான தீர்வு வீண் செலவுகளை குறைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Inflation is caused by the Federal government spending more than it earns, because they just print more money to make up the difference.
To solve inflation, reduce wasteful government spending. Your tax dollars should be spent well, not poorly.
— Elon Musk (@elonmusk) August 16, 2024
குறிப்பாக, “அரசாங்கம் தேவையற்ற செலவீனங்களை தவிர்த்துக்கொள்ளவும், மற்றும் அரசு அதன் வருவாய்க்குள் செலவழிப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் ஒரு சிறப்பு குழுவை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம், அரசு தனது செலவுகளை சரியான முறையில் நிர்வகித்து, பொதுமக்கள் செலுத்தும் வரி பணத்தை சரியான முறையில் பயன்படுத்த முடியும்” என அண்மையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் (Donald Trump) எக்ஸ் தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.