லூசிஃபர் 2
2019ம் ஆண்டு மலையாள சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று லூசிஃபர். இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. நடிகர் பிரித்விராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லூசிஃபர் 2: எம்புரான் திரைப்படம் உருவானது.
சமந்தாவின் முன்னாள் கணவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. இதுதான் காரணம்
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாகம் அளவிற்கு இப்படம் இல்லை என பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
வசூல்
இந்த நிலையில், எம்புரான் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.