மனிதர்கள் அழியும் அபாயத்தை எதிர் கொள்வதாகவும், பிறந்தவர்கள் அனைவரும் பெண்களாக இருப்பார்கள் என்றும் ஆய்வு ஒன்றின் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் (United States) நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலூட்டிகளின் பாலினத்தைத் தீர்மானிப்பதில் Y குரோமோசோம்களின் பங்கு மிக முக்கியமானது.
ஆனால், மனிதர்களின் உடலில் உள்ள Y குரோமோசோம்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாகவும், இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் முற்றிலுமாக அழிய வாய்ப்புள்ளதாகவும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
பிறந்தவர்கள் அனைவரும் பெண்கள்
மனித பாலினத்தை நிர்ணயிக்கும் குரோமோசோம், கடந்த இலட்சக்கணக்கான ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 166 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் அதன் பெரும்பாலான மரபணுக்களை இழந்துவிட்டதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
இது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு 10 மரபணுக்களின் இழப்பு விகிதம் எனவும் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 4.5 மில்லியன் ஆண்டுகளுக்குள் Y குரோமோசோம் முற்றிலும் மறைந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
ஒய் குரோமோசோம் தொலைந்தால், பிறந்தவர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.
எலி வகை
கிழக்கு ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் மோல் வோல்ஸ் (Mole voles) என்னும் உயிரினமும், ஜப்பானை சேர்ந்த ஸ்பைனி ரேட் (Spiny rat) என்னும் முள்ளெலிகளும், தங்களுடைய Y குரோமோசோமை முற்றிலுமாக இழந்துவிட்டன.
மோல் வோல் என்னும் எலி வகை மற்றும் ஜப்பானை சேர்ந்த முள்ளெலிகளின் உடலிலும் இந்த Y குரோமோசோம் தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்டது என நேஷனல் அகாடமி ஆப்ஃ சயின்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்படுகின்றது.