Courtesy: Sivaa Mayuri
நாட்டு மக்களை பல வருடங்களாக வறுமையில் தள்ளியுள்ள, திருட்டு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்துள்ளதாக ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை (Trincomalee) கந்தளாயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசப்பற்றுள்ள இளைஞர்கள்
திருடர்களின் அரசியலையும் பல தசாப்தங்களாக அவர்கள் மக்களை வறுமையில் வைத்திருக்கும் பழைய முறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, வாக்காளர் பொதுமக்களுக்கு தற்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகள் நட்சத்திரங்கள் அல்லர்.நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுள்ள இளைஞர்களே நட்சத்திரங்கள்.
எனவேதான் ‘நட்சத்திரம்’ சின்னத்தில் தாம் போட்டியிடுவதாக திலித் ஜயவீர விளக்கமளித்தார்.