வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு கொழும்பு (Colombo) – பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றி பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
இந்த நிலையில், எந்த வீத நெரிசலும் இன்றி வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் கடவுச்சீட்டுக்கள்
திணைக்களத்திடம் குறைந்த எண்ணிக்கையிலான வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்கள் காணப்பட்டமையால், கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
எனினும், நேற்றுமுன்தினம் மாத்திரம் ஆயிரம் கடவுச்சீட்டுக்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், அன்றைய தினம், பல நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரும் வரிசையில் டோக்கன் வழங்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.