தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில்
இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தயாராக
இருப்பதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர்
ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தி்ல் இன்று(05.03.2025) நடைபெற்ற வாராந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில்
இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தயாராக
இருப்பதான சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற
தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், பல்வேறு தரப்புக்களும்
உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். அது தொடர்பாக
கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, கடந்த காலங்களைப் போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில்
போட்டியிடுவதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,