கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் பிரசார கூட்டமும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, நேற்றையதினம் கிராஞ்சி செந்தாரகை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்நியநாதன், தவநாதன், சுரேஸ் சுந்தராம்பாள், கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், விளையாட்டு கழக
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏழு மாவட்டங்களில் போட்டி
இதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஏழு தேர்தல் மாவட்டங்களில்
போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.