தேசிய தேர்தல் ஆணைக்குழு மீது நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு 1981ஆம் ஆண்டு 15ஆம் இலக்க தேர்தல் சட்டத்தின் 57ஆம் மற்றும் 58ஆம் பிரிவுகளை மீறியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு
50 வீத வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுக்கொள்ளவில்லை என இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்தாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கை கட்சி பிரதிநிதிகள் இன்றி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெற்றி தோல்வி என்பதை விடவும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமானது என இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.