இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் தானும் இணைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ‘X’ கணக்கில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
தகுதியற்ற குற்றச்சாட்டுகள்
2022ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கி மோசமான நிலையை எதிர்கொண்ட போது நாட்டை மீட்க துணிந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும் அவை தகுதியற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு, ஐரோப்பாவில் குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையாகவோ கருதப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Please urgently release Ranil Wickremesinghe!
I join the many leaders in Sri Lanka, South Asia and around the world calling for the immediate release of Sri Lanka 🇱🇰 former President Ranil Wickremesinghe. We are all concerned for his health during detention.
Ranil was the… pic.twitter.com/Oolqejxb0X
— Erik Solheim (@ErikSolheim) August 24, 2025
இதேவேளை, ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு தான் முழு ஆதரவை வழங்குவதாகவும் தயவுசெய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.