நடிகை மதுமிதா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகத்தில் கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மதுமிதா. ஆனால், எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்கவில்லை.
விடுதலை 2 படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
விஜய் டிவி சீரியலில் மதுமிதா
எதிர்நீச்சல் சீரியலின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் டிவிக்கு வந்துள்ளார் மதுமிதா. ஆம், விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கவிருக்கும் சீரியல் அய்யனார் துணை.
இந்த சீரியலில் கதாநாயகியாக மதுமிதா நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், விஜய் டிவி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அய்யனார் துணை சீரியலின் ப்ரோமோ நாளை மாலை வெளிவரும் என்றும் அறிவித்துள்ளனர்.
View this post on Instagram