கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்
TRP-ல் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். முதல் பாகம் எப்படி மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதோ, அதே போல் தற்போது எதிர்நீச்சல் இரண்டாம் பாகமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

குணசேகரன் vs அவரது வீட்டு பெண்கள் என்றுதான் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் தற்போதைய கதைப்படி, பார்கவியின் தந்தை இறக்க அவருடைய மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ஜனனி மற்றும் பெண்கள் போராடி வருகிறது.

பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்
குணசேகரனை சிறையில் தள்ள வழக்கு பதிவு செய்த நிலையில், குணசேகரனின் தம்பி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தம்பியை சிறைக்கு அனுப்பிவைத்த பெண்கள் யாரும் தனது வீட்டில் காலடி எடுத்து வைக்க கூடாது என குணசேகரன் கோபத்தின் உச்சத்தில் வீட்டில் காத்திருக்கிறார்.

அந்த சமயத்தில் வீடு வாசலில் போலீசுடன் வந்து பெண்கள் நிற்கிறார்கள். இதன்பின் நடக்கப்போகும் பரபரப்பான திருப்பங்கள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

