எதிர்நீச்சல் தொடர்கிறது
ஈஸ்வரியை தாக்கிய வீடியோ ஜனனி தன்னிடம் இருக்கிறது என்று கூறியதால் குணசேகரன் கொஞ்சம் அமைதியாக உள்ளார்.
4 நாள் தலைமறைவாக இருந்தவர் அதிரடியாக கிரிமினல் பிளான்களுடன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த குணசேகரன் பழையபடி துப்பாக்கி காட்டி அதிரடியாக பேசிவிட்டு செல்கிறார்.

சக்தியிடம் தன்னிடம் எடுத்தவற்றை திரும்ப கொடு என கேட்க அவர் குணசேகரனிடம் எகிறி பேசுகிறார். இன்னொரு பக்கம் சக்தி-ஜனனி தேடிச்சென்ற நபர் இறந்துவிடுகிறார், வீடியோ கிடைக்காத வருத்தத்தில் இருவரும் பதறி போனார்கள்.

AK64 படத்திற்கு அஜித் பிரம்மாண்ட சம்பளம்.. புது உச்சம்! எத்தனை கோடி பாருங்க
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், கெவின் நண்பனின் உடல் பிணவறைக்கு எடுத்து செல்ல அங்கு ஜனனி-சக்தி சென்று ஏதாவது கிடைக்கிறதா என விசாரிக்க செல்கிறார்கள்.
அங்கு கொற்றவையும் இன்னொரு போலீஸ் அதிகாரியும் இருக்கிறார். குணசேகரன் ஏற்பாடு செய்த அந்த போலீஸ் அதிகாரி இறந்தவனிடம் இருந்து ஜனனி-சக்தி எதுவும் பெறவில்லை என்கிறார்.

உடனே குணசேகரன், ஜனனி-சக்தியை அழைத்து உங்களிடம் எதுவும் இல்லை பொய் சொல்கிறீர்கள் என எகிறி பேசுகிறார். ஆனால் ஜனனி ஈஸ்வரி-குணசேகரன் நடுவில் என்னென்ன நடந்தது என்பதை புட்டுபுட்டு வைக்க அவர் நடுங்குகிறார்.

