எதிர்நீச்சல் தொடர்கிறது
நான் ஆம்பளை என்னை யாரும் ஆட்டிப்படைக்க முடியாது, இந்த வீட்டிற்கு நான் தான் ராஜா, நான் சொல்லது தான் நடக்க வேண்டும் என இத்தனை நாள் இருந்தார் குணசேகரன்.
ஆனால் அவரது வீட்டுப் பெண்கள் இதுவரை அடங்கி இருந்தோம் இனிமேல் உங்களது மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என தைரியமாக குணசேகரனை எதிர்த்து வருகிறார்கள்.

முதலில் தர்ஷன்-பார்கவி திருமணத்தை குணசேகரனை தோற்கடித்து ஜனனி ஜெயித்தார். இப்போது அவருக்கு தலைவலியாக இருப்பது வீடியோ யாரிடம் உள்ளது, அஸ்வினை கொன்றது யார் என்பது தான்.
இன்னொரு பக்கம் குணசேகரன் 15 நாள் அவகாசம் கொடுத்திருப்பதால் இராமேஸ்வரம் சென்று அங்கு ஏதாவது விசாரிப்போம் என கிளம்பிவிட்டார்.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடிற்கான புரொமோ வந்துள்ளது. அதில் ஜனனி, அஸ்வினை யார் கொன்றது, அந்த புது டீம் யார் என குழம்பி போய்யுள்ளார். அந்த நேரத்தில் குணசேகரனை ஆட்டிப்படைக்க ஒரு புதிய நபர் என்ட்ரி கொடுக்கிறார்.

அஸ்வினிடம் இருந்து குணசேகரன் வீடியோவை பெற்றவர் என்பது தெரிகிறது, ஆனால் அவர் என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.
இதோ சீரியலின் புரொமோ,

