முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குற்றத்தை பிரித்து பார்ப்பது கூட குற்றம் தான்! இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

குற்றத்தை பிரித்து பார்ப்பது கூட குற்றம் தான் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற மாபெரும் வர்த்தக சந்தை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உலக முயற்சியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை

ஆனால் ஊழல்வாதிகளை
பாதுகாக்க கூடாது. அவர்கள் சுதந்திரமாக சுற்றிதிரிவதற்கு இடமளிக்கவும் கூடாது.
எனவே, முயற்சியாளர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல்தான்
ஊழல்வாதிகளுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குற்றத்தை பிரித்து பார்ப்பது கூட குற்றம் தான்! இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு | Even Looking At Crime Separately Is A Crime

தேங்காய் திருடினாலும் குற்றம்தான், மாங்காய் திருடினாலும் குற்றம்தான், நகை திருடினாலும் குற்றம்தான். எனவே, அது சிறிய குற்றம், இது பெரிய
குற்றம் என குற்றத்தை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான்.

கடந்தகாலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தற்போது
செயற்பட ஆரம்பித்துள்ளது. எனவேதான் தம்மை தற்காத்துக் கொள்வதற்காக கள்வர்கள்
கூட்டு சேர்ந்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கான கூட்டணி அல்ல. மாறாக கள்வர்களை
காப்பதற்கான கூட்டணியாகும்.

ஜனநாயகம்

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம்
ஓதுவதற்கு ஒப்பான செயலாகும்.

குற்றத்தை பிரித்து பார்ப்பது கூட குற்றம் தான்! இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு | Even Looking At Crime Separately Is A Crime

நாட்டில் இன்று நீதி கட்டமைப்பு சுயாதீனமாக
செயற்படுகின்றது. எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.

சட்டம் தனது கடமையை செய்வதற்குரிய வளங்களை நாம் வழங்கி வருகின்றோம்.

ஜனநாயகம்
பற்றி எதிரணிகள் எமக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை. ஜனநாயகம் என்றால்
என்னவென்பதை செயலில் காட்டியவர்கள் தான் நாம். கடந்த இரு தேர்தல்களின்போது
ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்பட்டது என்பது முழு உலகமும் அறியும் எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.