முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பட்டலந்த ஆணைக்குழுவில் நடந்தவற்றை வெளிப்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி

1995, செப்டம்பர் 21,அன்று, பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணையகம்
நிறுவப்பட்டதும், அது தொடர்பான சில விடயங்களையும் ஊடகம் ஓன்று செய்தியாக
வெளியிட்டுள்ளது.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக,
நடப்பு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கை

 இந்த ஆணைக்குழுவின் அறிக்கை, 1988/90 காலகட்டத்தில் பட்டலந்த வீட்டு
வளாகத்தில் இயங்கிய சித்திரவதை அறை பற்றிய பல விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

பட்டலந்த ஆணைக்குழுவில் நடந்தவற்றை வெளிப்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி | Ex Army Officer Exposes War Crimes Batalanda Repor

சித்திரவதையில் இருந்து தப்பியவர்கள் ஆணையகத்தின் முன், தாம் தவறாக
நடத்தப்பட்ட வீடுகளை அடையாளம் கண்டனர்.

இந்த விபரங்கள் ஆணையகத்தின் அறிக்கையில் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வளாகத்தில் உள்ள 2/2 இலக்க வீடு, 1983 முதல் 1989 ஏப்ரல் வரை இளைஞர்
விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு சுற்றுலா பங்களாவாக
ரணில் விக்ரமசிங்கவால் பயன்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 1989 முதல் 1994 வரை, தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, ​​விக்ரமசிங்க
அதே வீட்டை தனது அதிகாரப்பூர்வ இல்லமாகப் பயன்படுத்தினார்.

மர்மமான முறையில் உயிரிழப்பு

விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக 2/1 வீடு ஒதுக்கப்பட்டது

அதே நேரத்தில் 2/3 வீடு அவரது கீழ் உள்ள அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டது.

பட்டலந்த ஆணைக்குழுவில் நடந்தவற்றை வெளிப்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி | Ex Army Officer Exposes War Crimes Batalanda Repor

விக்ரமசிங்கவின் பங்களா பராமரிப்பாளராகப் பணியாற்றிய வின்சென்ட் பெர்னாண்டோ,
ஆணையகத்தின் முன் சாட்சியமளிக்க சில நாட்களுக்கு முன்னர்,மர்மமான முறையில்
இறந்தார்.

ரணில் விக்ரமசிங்க, ஆணைக்குழுவின் முன், சாட்சியமளித்த, சில நாட்களுக்கு
முன்னரே, அவர் மர்மமான முறையில் இறந்தார்.

சித்திரவதையிலிருந்து தப்பிய ஒருவர் ஆணையகத்திடம், இந்த வீட்டை அடையாளம்
காட்டினார்.

வீடு B1 விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது,
மேலும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான சுதத் சந்திரசேகர
B7 வீட்டை பயன்படுத்தினார்.

அருகில் அமைந்துள்ள வீடு B8, பொலிஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு
அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது.

என்ன நடந்தது

இந்த நிலையில், B8 வீட்டிலேயே, தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக ஏர்ல் சுகி
பெரேரா ஆணையகத்தின் முன் சாட்சியமளித்தார்.

முன்னர்,ஒரு ஊடக சந்திப்பில், முன்னாள் இராணுவ அதிகாரி இந்திராநந்த டி சில்வா
பட்டலந்தவில் நடந்த நிகழ்வுகள் குறித்த விபரங்களை வெளியிட்டார்.

பட்டலந்த ஆணைக்குழுவில் நடந்தவற்றை வெளிப்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி | Ex Army Officer Exposes War Crimes Batalanda Repor

“நான் இராணுவப் பொலிஸின் புகைப்படக் கலைஞராக இருந்தேன். சித்திரவதை அறைகளைப்
புகைப்படம் எடுத்து, கொல்லப்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்களை தொகுக்கும்
பணி எனக்கு வழங்கப்பட்டது.

பலர் கொல்லப்படுவதற்கு முதல் நாளில் புகைப்படம்
எடுக்கப்பட்டனர். சிலர் கொடூரமான சித்திரவதைகளைப் பார்த்து மகிழ்ந்து
பிரனாடியை உட்கொண்டனர். அத்தகையவர்கள் பின்னர் இந்த நாட்டின்
ஜனாதிபதிகளானார்கள்.

பட்டலந்த சித்திரவதை அறை பற்றி அனைத்தையும்
வெளிப்படுத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார், ஆனால் அது தற்கொலை அல்ல என்பது
எங்களுக்குத் தெரியும்.

டக்ளஸ் பீரிஸ் விஷயங்களை மறைக்க முயன்றபோது என்ன
நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய
விஜயதாச லியனாராச்சி, தங்காலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எஸ்எஸ்பியின்
வீட்டில் வைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர்
பட்டலந்தவுக்கு அழைத்து வரப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க

சட்டத்தரணிகள், நீதிமன்றத்தைப்
புறக்கணித்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை
தாக்கல் செய்தனர்.

பட்டலந்த ஆணைக்குழுவில் நடந்தவற்றை வெளிப்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி | Ex Army Officer Exposes War Crimes Batalanda Repor

எனினும் அதே நாளில் லியனாராச்சியை மருத்துவமனையில் சேர்க்க
வேண்டியிருந்தது. பின்னர் அவர் மரணமானார்.

அவரது பிரேத பரிசோதனையில் 19 உடைந்த
விலா எலும்புகள் மற்றும் 307 காயங்கள் இருப்பது தெரியவந்தது. ஏழைகளுக்காகப்
போராடிய விஜயதாச லியனாராச்சி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், அல் ஜசீரா நேர்காணலின் போது, பட்டலந்த அறிக்கை குறித்து, ரணில்
விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது

இந்த அறிக்கை ஒருபோதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று
விக்ரமசிங்க மீண்டும் மீண்டும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.