முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவையின் மரணத்தில் சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று இரவு காலமானார்.

இந்த நிலையில், தனது 82 ஆவது வயதில் மறைந்த மாவை சேனாதிராஜாவிற்கு இலங்கையின் முக்கிய அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலராலும் இரங்கல்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவிற்கான இரங்கல்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

சுமந்திரன் அஞ்சிய விடயம்

அதன்போது, சுமந்திரன் மாவைக்கு வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், “மாவை அண்ணன் பேரினவாதத்திறகு எதிரான மாபெரும் அடையாளமாக ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் திகழ்ந்தவரும் 1970களில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரும் ஆவார்.அவரது மறைவினையொட்டிய எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.” என தெரிவித்துள்ளார்.

மாவையின் மரணத்தில் சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் | Ex Itak Leader Mavai Senathiraja Sumanthiran Issue

இந்த நிலையில், சுமந்திரன், மாவைக்கு வெளியிட்டுள்ள முகப்புத்தக இரங்கல் பதிவில் கருத்து வெளியிடும் பகுதியை (Comment Section) வரையறுத்துள்ளதாக காட்டுகிறது.

கருத்து பகுதியை வரையறுக்க செய்தால் தங்களுக்கு தேவையானவர்களை தவிர வேறு எந்த ஒரு நபரின் கருத்துக்களையும் தவிர்த்து கொள்ள முடியும்.

இவ்வாறனதொரு பின்னணியில், கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவி தொடர்பில் மாவை சேனாதிராஜாவிற்கு எதிராக சுமந்திரன் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

அதன்படி, மாவைக்கான இரங்கல் பதிவில் சுமந்திரன், கருத்து பகுதியை வரையறுத்திருப்பதானது, அவ்வாறான விமர்சனங்களில் இருந்து தன்னை தானே பாதுகாத்து கொள்வதற்காக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

மேலும்,  சுமந்திரன் உள்ளிட்ட சிலரால் மாவை மரணத்திற்கு முன்னாள் கூட கடும் மன அழுத்தில் இருந்ததாகவும், இறுதி நிகழ்வில் கூட இவர்கள் கலந்து கொள்ள கூடாது என்று மாவை ஆதரவு தரப்புகளில் இருந்து கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக கருத்துக்கள் குறிப்பிடுகின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.