முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் : மைத்திரி அதிருப்தி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் குறித்து தான் கவலையடைவதாக மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

அத்துடன் 5 வருட காலப்பகுதியில் தான் 384 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக காட்டப்பட்டாலும், ஏனையவர்களின் பதவிக் காலத்தில் பாதியை மட்டுமே வெளிநாட்டுப் பயணச் செலவுகளாகக் காட்டியிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன இன்று (06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”2015 ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்தபோது, ​​ஐக்கிய நாடுகள் சபை (UN), கொமன்வெல்த் (Commonwealth), உலகின் சக்திவாய்ந்த நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான வெளிநாட்டு உறவுகள் முற்றிலுமாக முறிந்திருந்தன.

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் : மைத்திரி அதிருப்தி | Expenses For Foreign Trips Of Sl Former Presidents

இந்த நிலையில், நான் அதையெல்லாம் மீட்டெடுத்து வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தினேன்.

எனது பதவிக் காலத்தில், வெளிநாட்டு மாநாடுகளில் நான் பங்கேற்கும்போது, ​​வெளிநாடுகளின் தலைவர்கள் என்னை வந்து சந்தித்து நட்புரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபடும் அளவுக்கு வலுவான வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்த முடிந்தது.

வெளியுறவு அமைச்சு

எனது பதவிக் காலத்தில் கையெழுத்தான வெளிநாட்டு ஒப்பந்தங்கள் நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் இருந்ததுடன் குறித்த ஒப்பந்தங்களில் உள்ள ஆவணங்கள் இன்னும் வெளியுறவு அமைச்சு மற்றும் பிற முக்கிய அமைச்சுக்களிடம் உள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் : மைத்திரி அதிருப்தி | Expenses For Foreign Trips Of Sl Former Presidents

நான் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை 2020 முதல் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் செயw;படுத்தவில்லை, இதுவொரு துரதிர்ஷ்டமான விடயம் எனவும் நாட்டு மக்கள் இதனை அறிந்துகொள்ள வேண்டும்.

அத்தோடு, எனது ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தேவையில்லாமல் பணத்தை வீணடிக்கவில்லை” என மைத்ரிபால சிறிசேன தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.