ஜனாதிபதி தேர்தலுக்கான கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவர் ஊடாக எனது
கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14ஆம் திகதியே சமர்ப்பித்து விட்டேன் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர்
பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளரது செலவு அறிக்கை
மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சுயேட்சை வேட்பாளராக சங்கு சின்னத்தில் நான்
போட்டியிட்டு ஏறக்குறைய 2 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தேன்.
அதன்
அடிப்படையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி ஒரு வேட்பாளர் செலவு
செய்கின்ற செலவு அறிக்கைகளை குறிப்பிட்ட நேரத்தில் அறிக்கை செய்யப்பட
வேண்டும் என இருந்தது
அதன் அடிப்படையிலேயே கடந்த 13 ஆம் திகதிக்கிடையில் அந்த
அறிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்நிலையில், மூன்று பேர் அந்த செலவறிக்கையை வழங்கவில்லை எனவும், அதில் எனது பெயரும்
ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கணக்கறிக்கையை அனுப்பவில்லை
உண்மை என்னவெனில் எனது கணக்கறிக்கை சரியான முறையில் தயாரிக்கப்பட்டு, நான்
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை குழுவில் போட்டியிடுவதற்கான முகவராக
நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவர், எனது கையொப்பத்துடன் குறிப்பிட்ட
செலவறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கடந்த 14 ஆம் திகதி நேரடியாகவே
கையளித்திருந்தார்.
கடந்த 13 ஆம் திகதி என்பது விடுமுறை தினமாகையால் எனது
செலவறிக்கையை ஈமெயில் மூலமாகவும் பெக்ஸ் மூலமாகவும் அனுப்பியிருந்தோம்.
ஆனால் தற்போது பல ஊடகங்களில் சமூக வலைத்தலங்களிலும் சுயேட்சை வேட்பாளராக
போட்டியிட்ட நான் அந்த கணக்கறிக்கையை அனுப்பவில்லை என்ற செய்தி தொடர்ச்சியாக
வந்து கொண்டிருக்கின்றது.
அந்த செய்திகளுக்கு நான் முற்றாக மறுப்பைத்
தெரிவிக்கின்றேன் என ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.