முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் காணி அபகரிப்பு தொடர்பில் செந்தில் தொண்டமான் மீதான குற்றச்சாட்டு: அம்பலமாக்கப்பட்ட உண்மை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டின் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இருப்பதாக வெளியிடப்பட்ட தகவல் உண்மைத்தன்மையற்றதென காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் பல்வேறுபட்ட வழிகளில் மோசடி கும்பல்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாங்கேணியில் உள்ள தமிழர் ஒருவரின் காணி ஒன்று அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் செந்தில் தொண்டமான் செயற்பட்டுள்ளதாகவும் மற்றும் குறித்த காணியை அதன் உரிமையாளர் மீண்டும் பெற வேண்டுமென்றால் 50 இலட்சம் பணம் செலுத்த வேண்டுமெனவும் சிங்கள செய்தி தளமொன்றில் செய்திகள் வெளியாகியிருந்தன.

சுற்றுலா நாடான இலங்கை! 50 நாட்டவர்களுக்கு இலவச விசா

சுற்றுலா நாடான இலங்கை! 50 நாட்டவர்களுக்கு இலவச விசா

உண்மைத்தன்மை

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயும் முகமாக அந்த செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி உரிமையாளரின் தொடர்பு இலக்கங்களை தேடியெடுத்து அவரை தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்து வினவப்பட்டது.

தமிழர் காணி அபகரிப்பு தொடர்பில் செந்தில் தொண்டமான் மீதான குற்றச்சாட்டு: அம்பலமாக்கப்பட்ட உண்மை | Expropriation Of Tamil Land Senthil Thondaman

அப்பொழுது இந்த காணி விடயத்திற்கும் செந்தில் தொண்டமானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனவும் மற்றும் குறித்த செய்தி தளத்தில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் போலியானது எனவும் காணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குல்: அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்களின் வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குல்: அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்களின் வேண்டுகோள்

போலி விடயங்கள்

அத்தோடு அந்த காணியை இதற்கு முன் கைப்பற்ற நினைத்த சிலர் அவர்களுடைய அரசியல் இலாபத்திற்காகவும் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் மீது சேறு பூசுவதற்காகவும் இவ்வாறான போலி விடயங்களை பரப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் காணி அபகரிப்பு தொடர்பில் செந்தில் தொண்டமான் மீதான குற்றச்சாட்டு: அம்பலமாக்கப்பட்ட உண்மை | Expropriation Of Tamil Land Senthil Thondaman

இவ்வாறு அவர் எம்மிடம் கூறிய கருத்துக்களை வைத்து பார்க்கையில் குறித்த சிங்கள செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் போலியானது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

மேலும் புலம்பெயர்ந்து வாழும் உங்களுடைய காணிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்குமாயின் அவற்றின் உறுதிபத்திரங்கள், பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து தெரிந்துகொள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை நீங்கள் தொடர்பு கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த இந்தியா! காங்கிரஸ் மீது பழி போடும் மோடி அரசு

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த இந்தியா! காங்கிரஸ் மீது பழி போடும் மோடி அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.