முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க ஆதரவு வழங்கும் தமிழ் எம்.பி!

சிறிலங்கா (Sri Lanka) அதிபரின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கும் யோசனையை தாம் ஆதரிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.   

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நாட்டின் நிலையை சீர்குலைய செய்யுமெனவும் இதனடிப்படையில் அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்கும் யோசனைக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.      

தேர்தல் வேண்டாம்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ”இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலையில், தேர்தல்களை நடத்துவது சிறந்தது என ஒரு சட்டத்தரணியாக என்னால் கூறமுடியாது.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க ஆதரவு வழங்கும் தமிழ் எம்.பி! | Extend Presidents Tenure Tamil Politician Support

இலங்கையின் பொருளாதார நிலை இன்னும் முழுமையாக மேம்படவில்லை. இந்த நிலையில், இலங்கையில் தேர்தலை நடத்துவது நாட்டின் நிலைத்தன்மையை பாதிப்படைய செய்யும்.

தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை மற்றுமொரு தலைவர் மாற்ற முயற்சிக்கும் போது நாட்டின் நிலை மோசமடையும்.

நிலைத்தன்மை

இப்போது இலங்கையில் காணப்படும் நிலையில் எமக்கு ஜனநாயகம் குறித்து யோசிக்க முடியாது. இலங்கையின் நிலைத்தன்மையை பாதுகாப்பது தொடர்பிலேயே சிந்திக்க வே்ணடும்.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க ஆதரவு வழங்கும் தமிழ் எம்.பி! | Extend Presidents Tenure Tamil Politician Support

இந்த நிலையில், சிறிலங்கா அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான யோசனையை நான் ஆதரிக்கிறேன். இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் நான் இதுவரை ஆராயவில்லை.

எனினும், அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பது சிறந்தது. வாக்களிப்பது தொடர்பான மக்களின் உரிமை தொடர்பில் தற்போது எதுவும் பேச முடியாது. நாம் நடைமுறைகேற்ற வகையில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

இலங்கையின் எதிர்காலம்

இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் இதே நிலைப்பாடை கொண்டிருப்பார்கள் என கூற முடியாது. எதிர்ப்பார்க்கவும் முடியாது.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க ஆதரவு வழங்கும் தமிழ் எம்.பி! | Extend Presidents Tenure Tamil Politician Support

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் எந்தவொரு பேச்சுக்களையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. இலங்கையின் எதிர்காலத்தை நினைத்து நான் இந்த நிலைப்பாடுக்கு வந்துள்ளேன்.

தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தெற்கில் உள்ள அரசியல் தரப்பினர் வடக்குக்கான பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதற்கமைய, அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அண்மையில் வடக்குக்கு பயணம் செய்திருந்தனர்.

தேர்தலின் பின்னர் மக்களுக்கு அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள். இதுவே பல வருடங்களாக நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.