நாட்டின் அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு, அவசர நிலையை அறிவிக்கவேண்டும்
என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கோரியுள்ளார்.
அத்துடன், நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நிறுவனங்களின் ஆதரவைப் பெற வேண்டும்
என்றும் அவர் கேட்டுள்ளார்.
சர்வதேச ஆதரவைப் பெற வேண்டும்
இது தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க, காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையால் தற்போதைய பேரிடர் சூழ்நிலையை தாமாகவே கையாள முடியாது என்று
குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, எனவே, சர்வதேச ஆதரவைப் பெற வேண்டும் என்று
சுட்டிக்காட்டியுள்ளார்.

