அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான எப்-35 சி ( F-35 fighter jet) ரக போர் விமானம், பயிற்சியின் போது கலிபோர்னியாவில் (California) விழுந்து நொறுங்கியுள்ளது.
குறித்த விபத்து உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4:30 மணியளவில் இடம்பெற்றதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக விமானி வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் விமானம்
மத்திய கலிபோர்னியாவின் ப்ரெஷ்னோ நகரில் இருந்து தெற்கு மேற்கு பகுதியின் 64 கிலோ மீற்றர் தொலைவில் கடற்படைக்கு சொந்தமான லீமோர் கடற்படை விமான தளம் அமைந்துள்ளது.
அங்கு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடற்படையின் வி.எப் 125 ரப் ரைடர்ஸ் எனப்படும் பயிற்சி படைப்பிரிவினர் எப்-35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/NapwlkrbdYc

