முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

F1 திரை விமர்சனம்

டாப் கன் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த Joseph Kosinski இயக்கத்தில் ப்ராட்பிட் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் வந்துள்ள F1 படம் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ப்ராட்பிட் ஒரு காலத்தில் கலக்கு கலக்கு என்ற கலக்கிய ஒரு ரேஸர். தற்போது அவ்வபோது பணத்துக்கு ரேஸ் ஓட்டி வரும் இவரை அவருடைய நண்பர் ரூபன் F1 ரேஸிற்கு அழைத்து செல்கிறார்.

ஏனென்றால் ரூபனின் APX நிறுவனம் தொடர் தோல்வியால் விற்கும் நிலை இருக்க, இந்த நேரத்தில் வயதான ப்ராட்பிட் அங்க ரேஸ் ஓட்ட வர, அங்கு இளம் புயலாக பறக்கும் ஜோஸ்வாவுடன் இணைந்து ரேஸ் ஓட்டுகிறார்.

சொல்லபோனால் ரேஸையே ஒரு கேம்ளிங் போல் ஓட்டி ஜோஸ்வாவை ஜெயிக்க் வைத்து எப்படியாவது தன்னை நம்பிய APX நிறுவனத்தை ஜெயிக்க வைக்க ப்ராட்பிட் போராடுகிறார்.

அந்த நேரத்தில் ப்ராட்பிட் பேச்சை கேட்காமல், ஜோஸ்வா செய்யும் ஒரு விஷயம் அவருடைய கார் பெரிய ஆக்சிடண்ட் ஆக, இதற்கு காரணம் ப்ராட்பிட் தான் என அனைவரும் கூற, அதன் பிறகு அந்த APX நிறுவனம் என்ன ஆனது, ப்ராட்பிட் சொன்னது போல் வெற்றியை பெற்று தந்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ப்ராட்பிட் ஒரு ரேஸராக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படம் முழுவதும் அவ்வளவு ஸ்வாக், ரேஸுக்கு முன்பு திமிராக பேசுவது, தனக்கு தோன்றுவதை செய்வது, வாட்சை கழட்டி அப்பா புகைப்படத்திடம் வைத்துவிட்டு, சீட்டு கட்டில் ஒரு கார்ட்-யை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ரேஸ் கிளம்புவது என ஸ்கிரீன் ப்ரசன்ஸ் க்ளாஸ் எடுத்துள்ளார்.

ஒரு பார்முலா 1 ரேஸ் எப்படி நடக்கும் என்பதை அவ்வளவு துல்லியமாகவும் விறுவிறுப்பு குறையாமல் படம்பிடித்து காட்டியுள்ளனர். அதிலும் ப்ராட்பிட் டீம்-ற்கு வந்தவுடம் இளம் வீரர் ஜோஸ்வா காட்டும் ஈகோ, அதனால் அவர் செய்யும் வேலையால் ஏற்படும் இழப்பு, பிறகு ப்ராட்பிட் பற்றி தெறிந்து சேர்ந்து ரேஸ் ஒட்டுவது என ஜோஸ்வா கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.

அதோடு ப்ராட்பிட் நண்பன் கதாபாத்திரம் ரூபன், தன் நண்பனுகாக எல்லா இடத்திலும் நிற்பது என கவனம் ஈர்கிறார். படம் முழுவதுமே ரேஸ் ரேஸ் ரேஸ் தான்.

ரேஸ் தெரிந்தவர்களுக்கு அறுசுவை படையல் விருந்து தான் இந்த படம், அதே நேரத்தில் ரேஸ் பற்றி தெரியாதவர்களுக்கு படம் விறுவிறுப்பாக சென்றாலும், என்னடா வசனமே புரியல மோட்-ல் தான் படம் பார்க்க தோன்றும்.

டெக்னிக்கலாக படம் பெரும் வலுவாக உள்ளது, அதிலும் சீறிப்பாயும் அந்த ரேஸ் கார்களை துல்லியமாக படம் பிடித்த ஒளிப்பதிவு, அந்த கார் சவுண்ட்ஸ் ஒர்க், பின்னணி இசை என அனைத்தும் கலக்கல் தான்.

கிளைமேக்ஸ் ரேஸ் நாமே அந்த ரேஸ் ட்ராக்-ல் உட்கார்ந்து சீட் எட்ஜ் வந்தது போல் உள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் நடித்த நடிகர்கள் பங்களிப்பு.

டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும்.

திரைக்கதை

பல்ப்ஸ்

ரேஸ் பற்றி தெரியாதவர்களுக்கு கொஞ்சம் ஒட்டாமல் இருக்கலாம்.

மொத்தத்தில் செம பரபரப்பான சீட் எட்ஜ் F1 ரேஸ் பார்த்த அனுபவத்தை தருகிறது இந்த F1.

ரேட்டிங்: 3.5/5
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.