கண்டியில் உள்ள தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது என தலதா மாளிகையின் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலதா மாளிகைக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்கள் குறித்த வங்கிக் கணக்கிற்கு தங்களது நன்கொடையை வைப்பு செய்ய முடியும் என சமூக ஊடகங்களில் விளம்பரம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.
போலி விளம்பரம்
இந்த விளம்பரம் போலியானது எனவும் தலதா மாளிகைக்கு அரசாங்கத்தால் நன்கொடை வழங்கப்படுவதாகவும் தலதா மாளிகையின் பராமரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இத்தகைய போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என தலதா மாளிகையின் பராமரிப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.