அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியலுக்கு ரசிகர்கள் பலரும் உள்ளனர்.
இந்த சீரியலில் அரவிந்த் செய்ஜு, மதுமிதா, அருண் கார்த்தி, முனாஃப், பர்வேஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலின் தற்போதைய கதைகளம்படி, குடும்பத்துடன் அனைவரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்று வந்தால், குடும்பத்தில் உள்ள அனைத்து துயரங்களும் நீங்கும் என ஜோதிடர்கள் சொன்னதால், அனைவரும் புறப்பட்டு சென்றுள்ளனர்.
ரசிகர்கள் கூட்டம்
குலதெய்வம் கோவிலில் அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், சீரியலில் நடித்து வரும் நடிகர்களை நேரில் காண ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டது.
அங்கு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு கிடைத்த வரவேற்பை, சீரியலில் நடித்து வரும் நடிகர் அருண் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ:
View this post on Instagram