முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெல்லுக்கான உத்தரவாத விலை – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பதிய இணைப்பு

நெல்லுக்கான உத்தரவாத விலை விரைவில் அறிவிக்கப்ப
டாவிட்டால். விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர் என விவசாய அமைப்புகளின் பிர
திநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லுக்கான உத்தரவாத விலை இந்த வாரம் அறிவிக்கப்படும் என வர்த்தக வணிகம் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் (Mannar) உள்ள  அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகள் மீது கருணை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகள்

விவசாயிகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தினால் பாரிய அழிவுகளை சந்திக்கின்றனர். எனினும் தமது பாதிப்பிற்கு நியாயமான தீர்வை தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அதே நேரம் அரசாங்கம் விவசாயிகளின் நெல்லின் விலையை நிர்ணயம் செய்யும் நிலையில் அவர்களது
சிந்தனை இருக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

நெல்லுக்கான உத்தரவாத விலை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Farmers Seek Guarantees Price For Paddy

பொறுப்பான அமைச்சர் நெல்லின் நிர்ணய விலையை அறிவிப்பதாக கூறுகின்ற அதே நேரம்
அனுராதபுரம் மற்றும் ஏனைய பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்னரே நெல்லுக்கு
நிர்ணய விலையை தாம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் உள்ள விவசாயிகள் மாத்திரமே விவசாயிகள் என்றும் வடக்கு
கிழக்கில் உள்ள விவசாயிகளை விவசாயிகள் போல் தெரியவில்லையா? என கேள்வி
எழுப்பியுள்ளார்.

நெல்லுக்கான நிர்ணய விலை

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் குறைவாக நிர்ணயிக்க உள்ளதாக
அறிகிறோம்.இதனால் விவசாயிகள் விவசாயத்திற்காக செலவு செய்த முதலீடுகளை மீள
பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

நெல்லுக்கான உத்தரவாத விலை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Farmers Seek Guarantees Price For Paddy

எனவே அரசாங்கம் விவசாயிகள் நஷ்டத்தை
எதிர் நோக்காத வகையில் கூடிய விலை நிர்ணயத்தை தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் ஏனைய தனியார் நெல் கொள்வனவு செய்கின்றவர்கள்
அரசாங்கத்தை விட மிகவும் குறைவாகவே நெல்லை பெற்றுக்கொள்ள விலையை அவர்கள்
தீர்மானிப்பார்கள்.

எனவே கூடிய அளவிலான விலையை நெல்லுக்கு அரசாங்கம்
தீர்மானிக்கின்ற போது தனியார் நெல் கொள்வனவு செய்கிறவர்களும் கூடுதலான
விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வார்கள்.

நகைகளை வங்கியில் அடமானம் 

விவசாயத்திற்காக விவசாயிகள் வங்கிகளில் கடனை பெற்றும் நகைகளை வங்கியில்
அடமானம் வைத்தும் பணத்தை பெற்று விவசாயத்தை முன்னெடுத்துள்ளனர்.

நெல்லுக்கான உத்தரவாத விலை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Farmers Seek Guarantees Price For Paddy

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளை நாங்கள் தூக்கி விடுவதாக இருந்தால்
அவர்களின் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

எனவே புதிய அரசாங்கம் சாட்டுப்போக்கு கூறாமல் நெல்லின் விலையை நிர்ணயம் செய்து
அழிவில் இருந்து கொண்டுள்ள விவசாயிகளை தூக்கி விட வேண்டும் என்பதே எமது
கோரிக்கையாக உள்ளது என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.