ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை (ICCPR) அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்து அவர்களை சிறையில் அடைக்க முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டி, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழு, மல்வத்து அஸ்கிரி உபய மகா விஹாரையின் இரண்டு மகாநாயக்க தேரர்களையும் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் அனுர பிரியதர்ஷன யாப்பா, டிரான் அலஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனக வக்கும்புர, பிரேமநாத் சி. தொலவத்த, மொஹமட் முசம்மில், நிமல் பியதிஸ்ஸ உள்ளிட்ட குழு நேற்று (11) மல்வத்து அஸ்கிரி உபய மகா விஹாரைக்குச் சென்று இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.
முன்னாள் கடற்படைத்தளபதி அநியாயமாக கைது
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை அநியாயக் குற்றச்சாட்டுகளின் பேரில் தொடர்ந்து தடுத்து வைத்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போர்வீரர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் குறித்து மகாநாயக்கர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குழு, ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்யும் திட்டம் இருப்பதாகவும் தேரர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முப்படைகள், புலனாய்வு அதிகாரிகள், அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், மகா சங்கத்தினர் மற்றும் இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி வழிநடத்தும் மகா நாயக்கர்கள் ஆகியோரின் தலைவர்களை அரசாங்கம் பழிவாங்குகிறது.
அரசுக்கு ஆலோசனை வழங்குங்கள்
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இரண்டு மகா விஹாரைகளுக்கும் விஜயம் செய்வதன் நோக்கம், இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி வழிநடத்தும் மகா நாயக்க தேரர்கள் உட்பட மகா சங்கத்தினருக்கு பொருத்தமான உண்மைகளை முன்வைப்பதும், அரசாங்கத் தலைவருக்கு தேரர்கள் ஆலோசனை வழங்குவதை உறுதி செய்வதுமாகும் என தெரிவித்தனர்.


