சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்றும் நாளையும் வழங்கப்படும் என்று கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 9 மாவட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று கமநல சேவைகள் ஆணையர் நாயகம் ரோஹண ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
9 மாவட்டங்கள்
மேலும், உர மானியம் ரூபா 20 வீதம் வழங்கப்படுகிறது. 2 ஏக்கர் வரம்பிற்கு உட்பட்டு, ஒரு ஏக்கருக்கு நெல்லுக்கு 25,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றும் நாளையும் குறித்த மானியம் வழங்கும் நடவடிக்கைக்காக 157 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.