முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப் புலிகளால் மகிந்தவுக்கு உயிராபத்தா…! சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒருபோதும் எதுவிதமான உயிரச்சுறுத்தலும் இல்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கொழும்பில் (Colombo) செவ்வாய்க்கிழமை (31) மாலை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மீது புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை.

விசேட பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை

போர் இடம்பெற்ற தருணத்திலும் அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இருக்கவில்லை. மகிந்த ராஜபக்ச மீது குண்டுத் தாக்குதலை நடத்தவோ அல்லது வேறு விதமான தாக்குதலை நடத்தவோ இல்லை.

விடுதலைப் புலிகளால் மகிந்தவுக்கு உயிராபத்தா...! சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல் | Field Marshal Sarath Fonseka Abt Mahinda Security

மகிந்த ராஜபக்ச தனியாகவா யுத்தம் செய்தார்? நாம் யுத்தம் செய்யவில்லையா? யுத்தத்துக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான எனது முழுமையான பாதுகாப்பை 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு வெளியாகுவதற்கு முன்னரே நீக்கினர்.

அப்போது எனக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா?

வெலிகடை சிறையில் என்னை அடைத்த தருணத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் சிறையில் இருந்தார்.

அத்தருணத்தில் எனக்கு எவ்வித விசேட பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை.

தலைவர்கள் தப்பித்துச் செல்ல நடவடிக்கை

பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த தருணத்தில் இராணுவத் தலைமையகத்தில் என்மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தவந்திருந்த மொரிஸ் என்ற நபரும் நானும் ஒரே வாங்கில் தான் அமர்ந்திருந்தோம்.

விடுதலைப் புலிகளால் மகிந்தவுக்கு உயிராபத்தா...! சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல் | Field Marshal Sarath Fonseka Abt Mahinda Security

அப்போது எனக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா? மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒருபோதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள்.

மகிந்த ராஜபக்ச பிரபாகரனுடன் சமதான பேச்சுகளை நடத்தி யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவே ஆட்சிக்கு வந்தார். போர் முடிவதற்கு 3 மாதங்கள் இருந்த தருணத்தில் போர் நிறுத்தமொன்றையும் அறிவித்தார்.

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச் செல்லவே அவர் அந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக மூன்று மாதங்கள் போர் பின்நோக்கிச் சென்றதுடன், இராணுவத்தினரும் 5 கிலோ மீற்றர் தூரம் வரை பின்னோக்கி நகரும் நிலை ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்ச புலிகளுடன் நெருங்கிய உறவை பேணியிருந்தார். அதனால் புலிகளால் அவரது உயிருக்கு ஒருபோதும் ஆபத்து இல்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.