முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமல் போயுள்ள ரணில் கால முக்கிய கோப்புகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கிய ஊழல்
எதிர்ப்பு குழு அலுவலகத்திலிருந்து, பல கோப்புகள் காணாமல் போயுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் ஹரிணி அமரசூரிய, நேற்று(06.06.2025) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த
பிரதமர், முறைப்பாட்டு பதிவுகள் மற்றும் குழுவின் உறுப்பினர் ஒருவர்
சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பான கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்
காணவில்லை என்று கூறினார்.

ஊழல் எதிர்ப்புக் குழு

“கோப்புகளுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. முன்னாள் பிரதமர்
ரணில் விக்ரமசிங்க, 2022இல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது, அவற்றை
அகற்றினாரா என்பது எங்களுக்குத் தெரியாது,” என்றும் பிரதமர் நாடாளுமன்றத்தில்
தெரிவித்தார்.

காணாமல் போயுள்ள ரணில் கால முக்கிய கோப்புகள் | Files From The Ranil Era That Have Gone Missing

ஊழல் எதிர்ப்புக் குழு 2015இல் அமைச்சரவை ஒப்புதலுடன் நிறுவப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதன் தலைவராக பணியாற்றினார்.

காணாமல் போயுள்ள ரணில் கால முக்கிய கோப்புகள் | Files From The Ranil Era That Have Gone Missing

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன்
குழுவின் உறுப்பினராக இருந்தார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்