எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல பாறை பகுதியில் ஏற்பட்ட தீ, தற்போது எல்ல மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயத்தில் உள்ளது.
தற்போது, பண்டாரவளை வன பாதுகாப்பு அதிகாரிகள், எல்ல பிரதேச செயலகம் மற்றும் தியத்தலாவை விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் தீயை அணைக்க கடுமையாக செயற்பட்டு வருகின்றனர்.
காற்றின் வேகம் மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவையான நடவடிக்கை
இருப்பினும், வனவிலங்கு மண்டலத்திற்கு மேலே உள்ள வனப் பாதுகாப்பு மண்டலத்திற்குள் தீ நுழைவதைத் தடுக்க, வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் தலையீட்டால் வன எல்லையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தீ எல்ல-வெல்லவாய பிரதான வீதியை அடைவதைக் கட்டுப்படுத்த பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களின் உதவியைப் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.