ஃபயர் படம்
பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் ஃபயர்.
ஜே.சதீஷ் இயக்கி, தயாரித்தும் உள்ள இந்த படத்தில் பாலாஜியை தாண்டி ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
நாகர்கோவில் பகுதியில் வசித்து வந்த காசி என்ற பாலியல் குற்றவாளியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
பரிசு
கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியான இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைய படக்குழு செம சந்தோஷத்தில் உள்ளனர். இதனால் தயாரிப்பாளர் பாலாஜி முருகதாஸுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார்.
இதுவரை படம் சுமார் ரூ. 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.
I asked private jet but @JSKfilmcorp gave me only the chain, anyway thanks thala 😁#FireMovie marching into second week with 150 plus screens ❤️
Running successfully in theatres near you 🙌 #Fire#FireFromFeb14
#FireTamilMovie✨@JSKfilmcorp@Officialbalaji @IamChandini_12… pic.twitter.com/OQD9ykegjg— Balaji Murugadoss (@OfficialBalaji) February 21, 2025