சச்சின் படம்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் படமாக உள்ளது சச்சின்.
2005ம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் தயாரான இப்படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா, வடிவேலு என பலர் நடித்துள்ளனர். சச்சின் படத்தில் நடித்த சாக்லேட் பாய் விஜய்யை இன்று வரை ரசிகர்கள் ரசித்து வருகிறார்.
படு ஹிட்டடித்த இப்படம் மீண்டும் கடந்த ஏப்ரல் 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
படத்திற்கு ரசிகர்கள் பெரிய ஆளவில் ஆதரவு கொடுத்துள்ளனர், இதனை தயாரிப்பாளர் தாணுவே அறிவித்துள்ளார்.
ஃபஸ்ட் சாய்ஸ்
ஒரு படத்தின் கதை எழுதும் இயக்குனர் ஒருவரை நியாபகம் வைத்து எழுதுவார், ஆனால் படம் தயாராக ஆரம்பமாகும் போது ஒருவர் தேர்வாகி கடைசியில் வேறு ஒருவர் நடிக்கம் வரை நிறைய மாற்றங்கள் நடக்கும்.
அப்படி சச்சின் படத்தில் நாயகனாக முதலில் தேர்வானது விஜய் இல்லையாம். அவர் யார் என்றால் கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் தானாம், கால்ஷீட் பிரச்சனையால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.