குட் பேட் அக்லி
ஒரு இயக்குனர் தனது கதையை நேசித்து படம் இயக்குவதும், ஒரு நடிகரின் தீவிர ரசிகர் அவரையே வைத்து படம் இயக்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
அப்படி நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் அவரை வைத்து இயக்கியுள்ள படம் தான் குட் பேட் அக்லி.
அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியானது, ஒத்த ரூபாய் தாரேன் பாடலை ரீ மிக்ஸ் செய்து இதில் உபயோகித்தனர், ஆரம்பமே அமர்க்களமான பாடலுடன் ஆரம்பிக்க அஜித் கேங்ஸ்டர் அவதாரம் எடுத்திருந்தார்.
டிரைலர் கட் பயங்கரமாக இருக்க படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரத்தான காட்சி
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் காட்சி மதுரையில் திரையிடப்படாது என தகவல் வந்துள்ளது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ. 1900, தனி திரையரங்குகளுக்கு முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ. 500 என்று விற்கப்படுகிறதாம்.
ரூ. 500க்கு டிக்கெட் விற்கவில்லை என்றால் முதல் காட்சி இல்லை, 12 மணிக்கு தான் காட்சியை தொடங்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் செக் வைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் முதல் காட்சி என்ன ஆகும் என கவலையில் உள்ளனர்.