கைத்தொழில் அமைச்சின் பணியை பொறுப்பேற்றவுடனேயே முதல் தொலைபேசி அழைப்பாக தொலைபேசிக்கான நிலுவைத் தொகையான 24,220 ரூபாவை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
அண்மையில் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் அரச நிறுவனங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக அவர் அதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் தொலைபேசி அழைப்பு
அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது, “நான் எனது அமைச்சுக்குச் சென்றபோது, அமைச்சருக்கு வழங்கப்பட்ட தொலைபேசியிலிருந்து எனக்கு வந்த முதல் தொலைபேசி வந்தது.என்னை வாழ்த்த வேறு யாராவது அழைப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என நினைத்தேன்.
ஆனால் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் ஊழியப் பெண்ணொருவர் 24,220 ரூபா தொலைபேசி கட்டணம் நிலுவையில் உள்ளதாகவும் கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான விடயங்கள் மூலம் எமது நாட்டின் நிறுவனங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்” என்றார்.