கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று றீ(ச்)ஷா பண்ணைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் றீ(ச்)ஷா பண்ணையின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.
சுற்றுலாத் தலம்
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.

இங்கு மீன்வளர்ப்பு, பறவைகள் வளர்ப்பு, மரக்கறி மற்றும் பழங்கள் பயிர்செய்கை, காளான் பண்ணை என பல புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் றீட்ஷா பண்ணைக்கு சென்ற அமைச்சர் சந்திரசேகர், அங்குள்ள இயற்கை காட்சிகளை பார்த்து இரசித்துள்ளார்.




