நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை உள்ளீர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (19.10.2024) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்கள் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணத்தில் மொத்தம் 46,000இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடற்றொழிலை தமது வாழ்வாதாரத்திற்கான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை கருத்திற்கொண்டு அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கூறுகையில்,