இலங்கையின் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு கொன்ஸ்டபிள் உட்பட
ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை நடவடிக்கைகள்
இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் சுமார் 30 மில்லியன் ரூபாயை வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், வாகனம் ஒன்றை
சோதனையிட்ட போது, குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த பணத் தொகையின் மூலத்தையும், அதன் நோக்கத்தையும் கண்டறிய, தற்போது பொலிஸ்
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு
வருகின்றன.