மத்திய சுவீடனில் (Sweden) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் மத்திய சுவீடனிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துப்பாக்கி சூட்டிற்கு இலக்கானவர்களின் பாதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மாணவர்கள் பாதுகாப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த பாடசாலைக்கு அருகிலுள்ள வளாகத்தில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பாடசாலைக்கு அருகிலுள்ள பள்ளிகளிலுள்ள மாணவர்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

