முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின்: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

கிழக்கு ஸ்பெயினில் (Spain) ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளத்தினால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாயன்று பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் விளைவாக வீதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

குறித்த வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் ஸ்பெயின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின்: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு | Flash Floods In Eastern Spain

வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க முடியாது என ஸ்பெயினின் வலென்சியா பிராந்தியத்தின் தலைவர் கார்லோஸ் மசோன் தெரிவித்துள்ளார்.

அவசர சேவை

வலென்சியா பிராந்தியத்தில் உள்ள சிச்வா பகுதியில் செவ்வாய்கிழமை எட்டு மணித்தியாலங்களில் 491 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

இது ஸ்பெயினில் ஒரு வருடத்தில் பெய்யும் மழைக்கு சமனானது என அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

 வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லெட்டூர் நகராட்சியில் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு அவசர சேவைப் பணியாளர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்