முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Flight Risk திரை விமர்சனம்

Flight Risk திரை விமர்சனம் 

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் மெல் கிப்சன் இயக்கத்தில் மார்க் வால்பெர்க் நடிப்பில் வெளியாகியுள்ள Flight Risk திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.

Flight Risk திரை விமர்சனம் | Flight Risk Movie Review

கதைக்களம்

அலாஸ்காவில் மோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் வின்ஸ்டன் என்ற நபரை அமெரிக்க துணை மார்ஷல் மேடலின் ஹாரிஸ் கைது செய்கிறார்.

முக்கிய சாட்சியான அவரை அங்கிருந்து பழைய சிறிய ரக விமானத்தில் மேடலின் அழைத்து வர வேண்டும்.

ஆனால் அவருக்கு விமானம் ஓட்ட தெரியாது என்பதால் டெர்ல் பூத் என்ற விமானி அவர்களுடன் பயணிக்கிறார்.

மூவரும் வானில் பயணிக்க டெர்ல் உண்மையான விமானி இல்லை என்பதை பின்னால் அமர்ந்திருக்கும் வின்ஸ்டன் கண்டுபிடித்து விடுகிறார்.

அவர் சீட்டில் கட்டப்பட்டிருப்பதால் மேடலினிடம் உடனே அதனை கூற முடியவில்லை.

எனினும் ஒரு கட்டத்தில் டெர்ல் போலி விமானி என்பதையும், அவர் ஒரு ஹிட்மேன் என்பதையும் மேடலின் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

அதன் பின்னர் அவரை அடித்து கட்டிபோட்டுவிட்டு விமானத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்கிறார்.

சாட்சியை விமானம் ஓட்டத் தெரியாத மேடலின் எப்படி கொண்டு சேர்த்தார்? ஹிட்மேன் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

பிரேவ் ஹார்ட், லீதல் வெப்பன், மேட்மேக்ஸ் படங்களில் நடித்து மிரட்டிய மெல் கிப்சன்தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிரபல நடிகர் மார்க் வால்பெர்க் நெகடிவ் ரோலில் அதகளம் செய்துள்ளார்.

மேடலினாக நடித்திருக்கும் மிட்சேல் டக்கேரி ஆவேசமாக தாக்குவதிலும், எமோஷனலாகும் இடங்களிலும் என சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.

அதேபோல் வின்ஸ்டனாக நடித்திருக்கும் டாப்பர் கிரேஸ் அப்பாவியாக தெரியும் அதே நேரம் ஒன்லைன் காமெடி செய்து சிரிக்க வைக்கிறார்.

படம் முழுக்க விமானத்தில் நடக்கும் உரையாடல்கள், தாக்குதல்தான் என்றாலும் முடிந்த அளவிற்கு சுவாரஸ்யமாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மெல் கிப்சன்.

ஆனால், எவ்வளவு நேரம்தான் இப்படியே போகும் என பொறுமையும் சோதிக்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தரையிறங்கும் சமயம் வால்பெர்க் செய்யும் ஒரு செயல் “கங்குவா” படத்தை நியாபகப்படுத்துகிறது.

ஒரு வழியாக விமானம் லெண்ட் ஆகும் காட்சி சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

ஒன்றரை மணிநேர படம்தான் என்றாலும் நீண்ட நேரம் பார்த்தது போன்ற உணர்வுதான் முடியும்போது.

எனினும் திருப்திகரமான கிளைமேக்ஸை கொடுத்து வழியனுப்புகிறார் மெல் கிப்சன்.

க்ளாப்ஸ்

நடிப்பு

மேக்கிங்

ஒலிக்கலவை

பல்ப்ஸ்

சில இடங்களில் அயற்சி

இன்னும் திருப்பங்கள் சேர்த்திருக்கலாம்

மொத்தத்தில் வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை பெற விரும்புகிறவர்கள் இந்த Flight Risk-ஐ எடுக்கலாம்.

ரேட்டிங்: 2.5/5  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.