அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் என்கின்ற போர்வையில்
கடந்தகால அரசாங்கத்தை பழிவாங்க நினைப்பதாக முன்னாள் பிரதியமைச்சர்
அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக
கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நேற்று(17) செலுத்தியதன் பின்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
“மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்யாது இருப்பது அரசாங்கத்திற்கு மேலும் எதிர்ப்பை
ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் நாடு
சுதந்திரமடைவதற்கு முன்பும் அதன் பின்பும் அமைச்சரவையில் ஆகக் கூடுதலாக ஏழு
அமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.
ஏமாற்றப்பட்ட முஸ்லிம்கள்
இன்று பெரும்பான்மை சமூகத்துக்கு வாக்குகளை
அளித்த முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை
கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தில் 18 பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள்
இருக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.