முன்னாள் ஆளுனர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
வட மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் முன்னாள் ஆளுநராக இருந்த லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் இருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், கடந்த பொதுத் தேர்தலில் லக்ஷ்மண் யாப்பாவின் மகனான பசந்த யாப்பா அபேவர்த்தன, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் தேர்தலில் போட்டியிருந்தார்.
வேண்டுகோள்
இதற்கிடையே கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலை விட்டும் ஒதுங்குவதாக அறிவித்த லக்ஷ்மண் யாப்பா, தற்போது மொட்டுக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளதுடன், அக்கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் வேண்டுகோள் காரணமாகவே தான் மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைந்து செயற்பட முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.