முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒளிந்துத் திரியும் முன்னாள் அமைச்சர் – தேடும் அதிகாரிகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகள் தடுப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிரிந்த மீன்பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைகளை சட்டவிரோதமாக கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் 262 லட்சம் ரூபா இழப்பை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு ஆணைக்குழுவினால் பல்வேறு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து ராஜித சேனாரத்ன வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தரவில்லை.

உயர் நீதிமன்றம் உத்தரவு

அதன் காரணமாக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஒளிந்துத் திரியும் முன்னாள் அமைச்சர் - தேடும் அதிகாரிகள் | Former Minister Rajitha Senaratne Abscond

எனினும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதுடன், அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவினால் தான் கைது செய்யப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் முன்பிணை வழங்குமாறு கோரி ராஜித சேனாரத்ன தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுவை எதிர்வரும் செப்டம்பர் 01ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்