சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் 2016 முதல் 2017 வரை மாதத்திற்கு 4,700 லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
குறித்த விடயமான கோபா குழுவில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், முதலமைச்சருக்கு மாதத்திற்கு 1,700 லீற்றர் எரிபொருளுக்கு அதிகாரப்பூர்வமாக உரிமை உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத எரிபொருள்
எனினும், முன்னாள் முதலமைச்சர் இயந்திர அதிகாரசபையிடமிருந்து மேலும் 1,500 லீற்றர் எரிபொருளையும், சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து மேலும் 1,500 லீற்றர் எரிபொருளையும் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளார்.

அதன்படி, முன்னாள் முதலமைச்சரின் மாதத்திற்கு எரிபொருள் 4,700 லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமாக பெற்றுள்ளார்.

