முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சிரேஸ்ட அதிகாரிகள் பலர் கோயில்கள், விஹாரைகள், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட முக்கியஸ்தாகள் இவ்வாறு பூஜை வழிபாடுகள், யாகங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பலர் இவ்வாறு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களில் சுமார் 20 முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காமத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அரச உயர் அதிகாரியொருவர் விசேட பாதுகாப்புடன் அனுராதபுரம் ஜயஶ்ரீ மஹாபோதிக்கு சென்று பௌத்த பிக்குகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஒரு அரசியல்வாதி இந்தியாவில் உள்ள கோயிலுக்கு சென்று பாரியளவில் பூஜை வழிபாடுகளில் ஈடபட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய பல முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

