சர்வதேச நாணய நிதியம்(imf) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியதில் மகிழ்ச்சி அடைவதாக
முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க(sehan semasinghe), தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 3 வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கிறது.
“இந்த வெற்றியானது பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் நான்காவது தவணை நிதி உதவியை திறப்பதற்கு வழி வகுக்கிறது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு முழு நம்பிக்கையை வழங்கியது.
இந்த இக்கட்டான காலப்பகுதியானது, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை சந்திப்பது மட்டுமன்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை தாண்டியதுடன், பல துறைகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கைக்கு முழு நம்பிக்கையை வழங்கியது.
சவால்களை சந்திப்பதில் முக்கிய பங்கு
பொருளாதாரத்தை புத்துயிர் அடையச் செய்வதற்காக நாங்கள் அறிமுகப்படுத்திய EFF திட்டமானது, தற்போதைய அரசால் முதலில் எதிர்க்கப்பட்டது, ஆனால் தற்போது நாட்டின் சவால்களை சந்திப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஒழுக்கமான கட்டமைப்பை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.