முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவையின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு

முதலாம் இணைப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(02/02/2025, ) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.     

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புதிய இணைப்பு

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொறுப்பேற்றார்.

மாவையின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு | Former Tna Leader Mavai Senathiraja Passed Away   

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் மறைவை அடுத்து அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக சென்றிருந்தனர்.

இதன்படி மாவை சேனாதிராஜாவின் உடலை குடும்பத்தவர்களின் அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.       

மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா காலமானார்.

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) சற்றுமுன்னர் தனது 82 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

தலையில் நரம்பு வெடிப்பு

மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில், தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க் கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மாவையின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு | Former Tna Leader Mavai Senathiraja Passed Away

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் உயிரிழந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.