உலகின் முன்னணி சமூகவலைத்தளமான யூடியூப் (youtube) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO) சூசன் வோஜ்சிக்கி தனது 56 வது வயதில் காலமானார்.
அவரது கணவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சூசன் வோஜ்சிக்கியின் மறைவுச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது அன்பு மனைவியும் ஐந்து பிள்ளைகளின் தாயும் இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி இன்று எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
சூசன் முக்கிய பங்கு
சூசன் வோஜ்சிக்கி (Susan Wojcicki) கடந்த 2014ஆம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உடல்நல பிரச்சனை காரணமாக பதவி விலகல் செய்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த இவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சூசன் மரணத்திற்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த என் நண்பர் சூசனின் இழப்பு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் சூசன் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.