முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவிடம் சுதந்திர தேவி சிலையைத் திருப்பி கேட்ட பிரான்ஸ்

பிரான்ஸ்(France) அமைச்சர் ஒருவர் அமெரிக்காவிடம்(US) சுதந்திர தேவி சிலையைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளதைத் தொடர்ந்து சர்ச்சை உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதியுமான ரஃபேல் க்லக்ஸ்மேன் (Raphaël Glucksmann) என்பவர், சுதந்திர தேவி சிலையைத் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை (Statue of Liberty), பிரான்ஸ் நாடு அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கிய சிலை ஆகும்.

சுதந்திர தேவி சிலை

கடந்த 1884ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் திகதி, அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் 108ஆவது ஆண்டு விழாவையொட்டி, பிரான்ஸ் சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது.

அமெரிக்காவிடம் சுதந்திர தேவி சிலையைத் திருப்பி கேட்ட பிரான்ஸ் | France Ask Us To Return Liberty Statue Controversy

அதை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டுச் சிற்பியான பிரடெரிக் அகஸ்ட் பார்த்தோல்டி (Frédéric Auguste Bartholdi) என்பவர் ஆவார்.

ரஷ்யா உக்ரைன் நிலைப்பாடு தொடர்பில் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள் மற்ற நாடுகளைக் கொந்தளிக்கச் செய்துள்ளன.

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதியுமான ரஃபேல், அமெரிக்கா அடக்குமுறை ராஜ்யங்கள் பக்கம் சாய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவிடம் சுதந்திர தேவி சிலையைத் திருப்பி கேட்ட பிரான்ஸ் | France Ask Us To Return Liberty Statue Controversy

அறிவியல் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களை பணிநீக்கம் செய்வது முதலான ட்ரம்பின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஃபேல், சுதந்திர தேவி சிலையை அமெரிக்கா பிரான்ஸுக்கே திருப்பிக் கொடுக்கவேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்